search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் விழா"

    • வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டப் பகுதிகளும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளன.
    • நிவாரணத் தொகையை தாராள மனதுடன் வழங்கிட மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிச்சாங் புயலாலும், மித மிஞ்சிய பெருமழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டப் பகுதிகளும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளன.

    பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்ற போதிலும் நிலைமை முழுமையாக சீரடைய இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகக்கூடும்.

    இயற்கைச் சீற்றத்தால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்ற நிலையில், தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை தாராள மனதுடன் வழங்கிட மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    இத்தகைய சூழ்நிலையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக கலிங்கப்பட்டியில் நான் நடத்தி வரும் தமிழர் திருநாள் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இவ்வாண்டு நடைபெறாது என்பதைத் தெரிவித்துக கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொங்கல் விழா காலை தொடங்கி நடந்தது.
    • பக்தர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து மாரியம்மனை வழிபாடு செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் காங்கேயம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 15 நாள் பொங்கல் வைபோகம் சிறப்பாக கொண்டாடப்படும் . இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதல் நிக ழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து 25-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வந்தது.

    கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், கம்பத்திற்கு வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.

    வேண்டுதல்காரர்கள் அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தி வந்தனர். தினமும் இரவு மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா காட்சியும் நடந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இன்று பொங்கல் விழா காலை 7 மணிக்கு தொடங்கி நடந்தது.

    பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தி பரவ சத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் கோவில் தலைமை பூசாரி வாசுதேவன், புலவர் அறிவு, மற்றும் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • வாடிப்பட்டி அருகே ஆதிஅய்யனார் கோவிலில் நடந்த புரட்டாசி பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான்-மேட்டு நீரேத்தான் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஆதி அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாள் ஆதி அய்யனார் சந்தன காப்பு அலங்காரத்திலும், 2-ம் நாள் வெள்ளிகாப்பு அலங்காரத்திலும் காட்சி அளித்தார். முதல் நாளில் அய்யனார் கோவில் வீட்டில் இருந்து பொட்டி எடுப்பு ஊர்வலம் நடந்தது. அப்போது பொதுமக்கள் வாழை பழங்களை சூறை யிட்டனர்.

    2-ம் நாள் தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் உள்ள நடுக்கல் அலங்கரிக் கப்பட்டு இருந்தது. அதனை பொதுமக்கள் வணங்கி சென்றனர். 2 நாள் திரு விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    வழக்கமாக 2-ம் நாள் திருவிழாவில் மஞ்சு விரட்டு நடத்தப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போலீசார் அனுமதி அளிக்காததால் மஞ்சு விரட்டு நடக்கவில்லை. இதனால் மாடு வளர்ப்போர், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இனி மேலாவது வரும் திருவிழா வில் மஞ்சுவிரட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

    • சோழவந்தான்அருகேதேனூரில் சுந்தரவள்ளி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது.
    • பக்தர்கள் பொங்கல் வைத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான்அருகேதேனூரில் சுந்தரவள்ளிஅம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் சுந்தர வள்ளி அம்மன் சிறிய கோவிலில் இருந்து பெரிய கோவிலுக்கு அம்மன் வந்து சேர்ந்தார்.

    அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர். மறுநாள் காலை அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி ஏழு கரகாரர்கள் முன்னிலையில் சக்தி கிரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    பக்தர்கள் சேத்தாண்டி வேஷம் மற்றும் கரும்புள்ளி செம்புலி குத்தி ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து அம்மன் சிறிய கோவிலை வந்து சேர்ந்ததையடுத்து விழா முடிவடைந்தது.  

    • சோழவந்தான் அருகே பத்திரகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி பத்திர காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5-ந் தேதி காப்பு கட்டு வைபவமும், 21-ந் தேதி இரவு சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி வைகையாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று 250-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு ஊராட்சி கவுன்சிலர் செல்வராணி கந்தசாமி சில்வர் வாளி, சட்டிகளை பரிசாக வழங்கினார். மாலையில் முளைப்பாரியை வைகையாற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    • சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு சிவகாசியில் 5 நாட்கள் விமரிசையாக நடந்த பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • பக்தர்கள் தேர் சக்கரங்களில் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

    சிவகாசி

    சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழா தொடங்கிய நாள் முதல் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மேலும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் பொங்கல் வைத்தும், பல்வேறு நேர்த்திக்கடன் களை செலுத்தியும் வழிபாடு நடத்தினர்.

    இந்த திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பத்திரகாளியம்ம னும், சிறிய தேரில் விநாயக ரும் எழுந்தருளினர். 5 நாட்கள் மாலையில் நடந்த தேரோட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பக்தர்கள் வெள்ளத்தில் ரத வீதிகளில் தேர் ஆடி அசைந்து வந்தது கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. 5 நாட்கள் வீதிகளை சுற்றி வந்த தேர் நேற்றைய தினம் நிலைக்கு வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் தேர் சக்கரங்களில் தேங்காய் உடைத்து வழிபட்டனர். 

    • சென்னிமலை காமாட்சி அம்மன் பொங்கல் விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • ஆண்களும், பெண்களும் பய பக்தியுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை காமாட்சி அம்மன் பொங்கல் விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு விழா கடந்த 10-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இன்று காலை 7 மணிக்கு பால் குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சென்னிமலை நான்கு ரத வீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக வலம் வந்து காமாட்சி யம்மன் கோவிலையடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பய பக்தியுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். பால் குடங்கள் கோவிலை அடைந்த பின்பு காமாட்சி யம்மனுக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கி ழமை) மாலை 6 மணிக்கு கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    17-ந் தேதி காமாட்சியம்மன் மாவிளக்கு க்குடன் திருவீதி களில் பவனி வந்து தீபாராதனை நடக்கிறது. 18-ந் தேதி வியாழன் காலை 6 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்று மாலை 3 மணிக்கு மேலப்பாளையம், மாதேஸ்வரநகரில் இருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு திருக்கோவிலை வந்துசேரும்.

    மாலை 4 மணிக்கு களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வ லம் புறப்பட்டு ஜென்டை மேளம் முழங்க கோவிலை வந்தடையும். 19-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர், மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    • பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.
    • பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை பூஜை நடைபெறுகிறது.

    காங்கயம் :

    முத்தூர் அருகே உள்ள சக்கரபாளையம் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு நாளை காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.

    மாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு பகவதி அம்மனுக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக இரவு 8 மணிக்கு பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை பூஜை நடைபெறுகிறது. விழாவில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழா நிறைவாக (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மறு அபிஷேக பூஜை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்பட்டது.
    • தலைமை பூஜாரி தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார்.

    கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி தேவி கோவிலும் ஒன்றாகும்.

    பல்வேறு வேண்டுதல்களுடன், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் புண்ணியஸ்தலமாக கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி தேவி கோவில் விளங்குகிறது. இந்த கோவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து வடமேற்கு திசையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது. 600 வருடங்களுக்கும் மேல் பழமையான இந்த கோவிலில் 2023-ம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நேற்று நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு கோவிலின் பிரதான பந்தலில் வைக்கப்பட்டு இருந்த பண்டார அடுப்பில் தலைமை பூஜாரி தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து கோவிலை சுற்றி 3 கி.மீ தூரத்திற்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். ஜெர்மனி போன்ற வெளிநாட்டு பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பெண்கள் இந்த பொங்கல் வழிபாட்டில் பங்கேற்றனர். பிற்பகல் 2.15 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் எம். ராதாகிருஷ்ணன் நாயர், செயல் தலைவர் எம்.விக்ரமன் நாயர், செயலாளர் பார்கவன் நாயர், பொருளாளர் மணிகண்டன் நாயர், துணைத் தலைவர் சங்கரதாசன் நாயர், இணைச் செயலாளர் சிவகுமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

    பொங்கல்வழிபாட்டையொட்டி கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டனர்.

    • பொங்கலிட்ட பெண் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • தெருக்கள் மட்டுமின்றி சாலையோரமும் பெண்கள் பொங்கலிட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது.

    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்காலை விழா இன்று நடந்தது.

    இதற்காக திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பண்டார அடுப்பில் காலை 10.30 மணிக்கு கோவில் பூசாரி தீ மூட்டி பொங்காலை விழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து திருவனந்தபுரம் நகர் முழுக்க பெண்கள் அடுப்பு மூட்டி பொங்கலிட்டனர்.

    திருவனந்தபுரம் முழுக்க பொங்கலிட்ட பெண் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதுபோல மலர்களும் தூவப்பட்டது.

    இன்று மதியம் 2.30 மணிக்கு பொங்கல் நைவேத்தியம் வழங்கப்படுகிறது.அதன்பிறகு தொடர்ந்து விழா நடைபெறுகிறது.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் முழுக்க பெண்கள் அடுப்பு மூட்டி பொங்கலிட்டதால் எங்கும் புகை மூட்டமாக காணப்பட்டது.

    மேலும் தெருக்கள் மட்டுமின்றி சாலையோரமும் பெண்கள் பொங்கலிட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது.

    • லட்சக்கணக்கான பெண்கள் இந்த பொங்கலை வழிபாட்டில் பங்கேற்கிறார்கள்.
    • 8-ந்தேதி யானை மீது அம்மனை வைத்து ஊர்வலம் நடைபெறும்.

    கேரளாவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுவது, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்காலை விழா உலகப் பிரசித்தி பெற்றது ஆகும்.

    இந்த விழாவின் போது உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். லட்சக்கணக்கான பெண்கள் இந்த பொங்கலை வழிபாட்டில் பங்கேற்பது வழக்கம்.

    கடந்த 2009-ம் ஆண்டு இங்கு நடந்த பொங்காலை விழாவில் அதிக அளவிலான பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சிறப்பு வாய்ந்த இந்த பொங்காலை விழா இந்த ஆண்டு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்காலை திருவிழா நாளை (7-ந் தேதி) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பொங்கல் வைப்பதற்காக பெண் பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.

    நாளை அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. 10.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படுகிறது. அப்போது பெண்கள் குலவையிடுவார்கள்.

    செண்டை மேளம், வாண வேடிக்கை போன்றவையும் நிகழ்த்தப்படும். இதனை தொடர்ந்து கோவிலைச் சுற்றிலும் சுமார் 20 கி.மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

    அப்போது ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து பொங்கல் பானைகள் மீது பூக்கள் தூவப்படும். பிற்பகல் 2.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பூசாரிகள் ஈடுபடுவார்கள்.

    வருகிற 8-ந்தேதி காலை 8 மணிக்கு யானை மீது அம்மனை வைத்து ஊர்வலம் நடைபெறும் தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு 1 மணிக்கு குருதி சமர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    பொங்காலை விழாவில் பங்கேற்க கேரளாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்தும் பெண் பக்தர்கள் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் குவிந்துள்ளனர். இதனால் திருவனந்தபுரம் நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    பொங்காலை வழிபாட்டில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • சொக்கநாதபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மங்கை வள்ளி குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னிமலை,மார்ச்.3-

    சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 15-ந் தேதி பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது.

    பின்னர் 22-ந் தேதி இரவு கோவிலுக்கு முன்பு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் விழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் சொக்கநாதபாளையத்தை சேர்ந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அக்னி கும்பம் எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் காலை 7 மணிக்கு மேல் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவிலை சேர்ந்த திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    பொங்கலை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.

    இதேபோல் அய்யம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது. கடந்த வாரம் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடந்த 1-ந் தேதி இரவு மங்கை வள்ளி குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா காலை நடைபெற்றது.

    இதில் அய்யம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    ×